ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய மகளிர் அணி !
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
16 பேர் கொண்ட இந்த அணியில் 8 பேர் முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீராங்கனைகளாவர். அணியின் கேப்டனாக ராணி ராம்பால் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குர்ஜித் கெளர், உதிதா, நிஷா, நேஹா, நவ்னீத் கெளர், ஷர்மிளா தேவி, லால்ரெம்சியாமி, சலீமா டெடெ ஆகிய 8 பேர் முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். ராணி ராம்பால், சவிதா, தீப் கிரேஸ் இகா, சுஷிலா சானு புக்ரம்பம், மோனிகா, நிக்கி பிரதான், நவ்ஜோத் கெளர், வந்தனா கட்டாரியா ஆகிய 8 பேரும் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனுபவ வீராங்கனைகளாவர்.
கோல் கீப்பர் - சவிதா; தடுப்பாட்ட வீராங்கனைகள்- தீப் கிரேஸ் இகா, நிக்கி பிரதான், குர்ஜித் கெளர், உதிதா; நடுகள வீராங்கனைகள்- நிஷா, நேஹா, சுஷிலா சானு புக்ரம்பம், மோனிகா, நவ்ஜோத் கெளர், சலிமா டெடெ; முன்கள வீராங்கனைகள்- ராணி ராம்பால், நவ்னீத் கெளர், லால்ரெம்சியாமி, வந்தனா கட்டாரியா, ஷர்மிளா தேவி.
Tags :