பிரபல கொள்ளை கும்பலை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் கைது..?
நெல்லை மாநகரத்தில் சமீபத்தில் வழக்கறிஞர் ஒருவரது வீட்டில் 70 பவுன் கொள்ளை போனது.இந்தக்கொள்ளை சம்பவம் தொடர்பாக மாநகர காவல்துறை தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தநிலையில்அரசியல் கட்சி ஒன்றின் நெல்லை மாவட்ட நிர்வாகி ஒருவருக்கு தொடர்பு இந்தநிலையில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மாநகர காவல்துறையே அதிரும்வண்ணம் வரிசையாக தகவல்களை கூறவே அந்தநபர் நீண்ட ஆண்டுகளாக அரசியல் பின்புலத்தில் இருந்துகொஅவரிடமிருந்து சுமாராக தற்பொழுது 500 பவுன் வரை தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும்,தென்காசியிலும் ,கடையநல்லூர் பகுதிகளிலும் அந்த நபர் அதிகளவில் திருட்டு நகைகளை கொடுத்துள்ளதாகவும் அத்தனையும் மாநகர போலீசார் மீட்க தென்காசி பகுதிக்கும்,கடையநல்லூர் பகுதிக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் நெல்லையைச் சேர்ந்த அந்த அரசியல் கட்சியின் முக்கிய நிர்வாகி,ஒருவர் பிடிப்பட்ட நபர் நடத்தி உள்ள கொள்ளை சம்பவங்களுக்கு பக்க பலமாக இருந்துள்ளார்.எனவும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் நெல்லை யை சேர்ந்த அந்த முக்கிய பிரமுகர் வீட்டில் பேட்டை அருகேயுள்ள கரிசல்குளத்தில் பதுக்கி வைத்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ள தொடர்கொள்ளைச் சம்பங்களில் தொடர்புடைய அந்த அரசியல்கட்சி நிர்வாகிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தகவல்கள் வெளிவந்துள்ளது.கைதாகியுள்ள அரசியல்கட்சி நிர்வாகி கூட்டாளிகள் பலர் தற்பொழுது தலைமறைவாகி உள்ளனர்.தொடர்ந்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.இதனால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :