தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

by Editor / 20-12-2022 07:38:57am
 தமிழகத்தில் இன்று  கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் வரும் 23 ஆம் தேதி அன்று தமிழக மாவட்டங்களான ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

 மேலும் கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கோவை, திருப்பூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via