கருப்பாநதி பகுதியில் தொடர்மழைகாரணமாக ஏராளமான குளங்கள் நிரம்பியது-விவசாயிகள் மகிழ்ச்சி

by Editor / 05-12-2021 02:13:44pm
கருப்பாநதி பகுதியில் தொடர்மழைகாரணமாக ஏராளமான குளங்கள் நிரம்பியது-விவசாயிகள் மகிழ்ச்சி

தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்றத்தொகுதிக்குபட்ட வீரசிகாமணி குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களுக்கு கருப்பாநதி வழிந்தோடியின் மூலம் பாப்பான் கால்வாய்க்கு நீர்வரத்து இருந்து வருகிறது.மேலும் பாப்பான் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்ததன் காரணமாக 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் உள்ள விவசாய நிலங்கள்  பாசன வசதியின்றி வறட்சியை சந்தித்து வந்த நிலையில்  கருப்பாநதி நீர்த்தேக்கம் மூலம் நீர் செல்லும் பாப்பான் கால்வாய் முற்றிலுமாக தூர்வாரும் பணியினை  செய்யவேண்டுமென விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தென்காசி தெற்குமாவட்ட செயலாளர் சிவபத்மனாபன் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் கவனத்திற்கு கொண்டு சென்றதைத்தொடர்ந்து விவசாயிகளின் நலனைக்கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் தனிகவனம் செலுத்தி பாப்பான் கால்வாயை தூர்வார உத்திரவிட்டு அதற்கான பணிகளை நேரடியாக கண்காணித்தார்.இதன் தொடர்ச்சியாக கடந்த சிலநாட்களாக பெய்த கனமழை காரணமாக கருப்பாநதியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு அந்தநீர் பாப்பான் கால்வாய் வழியாக திருப்பி விடப்பட்டதின் காரணமாக வறட்சியான பகுதிகளாக விளங்கிய வீராணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்களுக்குகால்வாய்கள் மூலம் நீர் சென்றதால் வீரசிகாமணி குளம் அதன் கீழ் 4 குளங்கள் பெருகி இன்று மேலக்கலங்கல் குளத்திற்கு தண்ணீர் வந்தது. அதனை பொதுமக்கள் சார்பில் தென்காசி தெற்குமாவட்ட திமுக செயலாளர் சிவபத்மனாபன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துசெல்வி உள்ளிட்டோர்  விவசாயிகளோடு சென்று சென்று மலர்தூவி வரவேற்றனர்.

 

Tags :

Share via