அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார் பிரதமர் மோடி...

by Admin / 21-09-2021 11:50:55pm
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார் பிரதமர் மோடி...



அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, செப்டம்பர் 24-ம் தேதி பிரமதர் மோடி சந்திக்க உள்ளார்.

குவாட் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கநாளை அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, 23-ம் தேதி அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களை சந்திக்க உள்ளார்

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோரையும் சந்தித்து, பிரதமர் மோடி பேச உள்ளார்.

இதனையடுத்து, வரும் 24-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசும் பிரதமர் மோடி, செப்டம்பர் 25-ம் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரை நிகழ்த்த உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories