தமிழகத்தில் 19,588 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனாவால் 19,588 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,86,344 ஆக உயர்ந்துள்ளது. 17,164 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 10,54,746 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 147 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 14,193 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் நேற்று மேலும் 5,829 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,39,797 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக: செங்கல்பட்டில் 1,445 பேருக்கும், கோயம்புத்தூரில் 1,257 பேருக்கும், திருவள்ளூரில் 779 பேருக்கும், திருநெல்வேலியில் 812 பேருக்கும், மதுரையில் 711 பேருக்கும், சேலத்தில் 521 பேருக்கும், திருச்சியில் 528 பேருக்கும், தேனியில் 369 பேருக்கும், தூத்துக்குடியில் 638 பேருக்கும், திருப்பூரில் 438 பேருக்கும், விழுப்புரத்தில் 354 பேருக்கும், விருதுநகரில் 405 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
Tags :