கோவையில் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

by Admin / 05-07-2021 04:27:18pm
கோவையில் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

 

கோவை மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்றுமுதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியிருக்கிறது.இதற்காக நேற்றைய தினமே அனைத்து பணிமனைகளிலும் பேருந்துகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டன.இந்த  நிலையில் ஒவ்வொரு ட்ரிப் முடித்த பிறகும் இருக்கைகள், கைப்பிடிகள், படிக்கட்டுகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன. பயணிகள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, முக கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்த பின்னரே பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின்போது கட்டாயம் முக கவசம் அணிந்திருக்கவும், அரசின் நிலையான வழிகாட்டு நெறிகளை பின்பற்றி 50 சதவிகித பயணிகளை மட்டும் பேருந்தில் அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர் மற்றும் பொள்ளாச்சி, அன்னூர், கிணத்துக்கடவு, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து 625 நகரப் பேருந்துகளும், வெளி மாவட்டங்களுக்கு 845 பேருந்துகள் என மொத்தமாக 1425 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

Tags :

Share via