சீமான் மீது வழக்குப் பதிவு.. கரூர் நீதிமன்றம் உத்தரவு

by Staff / 14-10-2024 02:14:07pm
சீமான் மீது வழக்குப் பதிவு.. கரூர் நீதிமன்றம் உத்தரவு

சீமான் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் கடந்த 7ஆம் தேதி கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “குறிப்பிட்ட பட்டியல் ஜாதி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக நாதக சீமான் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும்” என கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், தான்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க கரூர் குற்றவியல் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

 

Tags :

Share via