மாதந்தோறும் ரூ.1000: கெஜ்ரிவால் வாக்குறுதி
மாதந்தோறும் ரூ.1000: கெஜ்ரிவால் வாக்குறுதி
.
உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலத்திலும் காலூன்ற விரும்புகிறது.
கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் . உத்தரகாண்ட் சென்றிருந்த நிலையில், இன்று பஞ்சாப் சென்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மோகாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘நாங்கள் 2022-ல் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைத்தால், 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும்.
குடும்பத்தில் மூன்று பெண்கள் இருந்தால், மாதந்தோறும் 3 ஆயிரம் பெறலாம். இது உலகின் மிகப்பெரிய பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டமாக இருக்கும்’’ என்றார்.
Tags :