பழனி முருகன் கோவிலில் இன்று குடமுழுக்கு
17 ஆண்டுகளுக்கு பிறகு அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடான பழனிமுருகனாகிய பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
குடமுழுக்கு இன்று காலை 8.00 முதல் 9.30 க்குள் ராஜகோபுரம் ,தங்கவிமானம்,கலசங்கள் புனித நீர்ஊற்றி குடமுழுக்கு
நடைபெறும் .18 ஆம் தேதி தொடங்கிய பூஜை கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.நேற்று அனைத்துப்பகுதிகளிலும்
உள்ள பாதவிநாயகர்,சேர்ர பாலகர்,இடும்பன்,கடம்பன்,சண்டி,குராவடிவேலன்,அகத்தியர்,வள்ளிநாயகி,சிவகிரீஸ்வரர்,சர்ப்த விநாயகர்,வேலாயுதர்உள்பட மற்ற தெய்வங்களின்திருச்சன்னிதானங்களுக்கு குடமுழுக்கு நடந்தது.இன்று ,ராஜகோபுரம்,தங்க விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெறும்.இன்று குடமுழுக்கில் அனைத்து பக்தர்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படாமல் குலுக்கல் முறையில் 2,000 பக்தர்கள்மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு குடமுழுக்கில் பங்கேற்க அனுமதிக்கப் பட்டுள்ளனர்.9.30 க்குப்பிறகு அனைத்து பக்தர்களும்வழிபட அனுமதிக்கப்படுவர்.இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.அனைத்து பக்தர்அன்னதானம் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கோவை-திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் ரயில் பக்கர்களின் வசதிக்காக 2728,29 தேதி களில் விடப்பட்டுள்ளது .கோவையிலிருந்து 9.20 க்கு புறப்பட்டு 1.00 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும்.திண்டுக்கல்லிருந்து 2.00( மதியம்) புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை வந்தடையும். பொதுமக்கள் நலன்கருதிவாகனங்களை நிறுத்த விரிவான ஏற்பாடுகளை மாவட்டநிர்வாகமும் காவல் துறை பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது
Tags :