தொடர் மழை காரணமாக சோலையார் அணை 100 அடியை எட்டியது . 

by Editor / 24-07-2023 03:56:36pm
தொடர் மழை காரணமாக  சோலையார் அணை 100 அடியை எட்டியது . 

 கோவை மாவட்டம் வால்பாறையில் பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் மூல அணையான சோலையார் அணை உள்ளது .இங்கு சேகரமாகும் நீர்  கேரளாவில் உள்ள பரம்பிக்குளம் அனைக்கு சென்று அங்கிருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் ஆழியாறு திருமூர்த்தி அணைக்கு செல்கிறது .இதன் மூலம் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு கோவை பொள்ளாச்சி திருப்பூர் மற்றும் திண்டுக்கல்  குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு  மாவட்டத்தில் ஒரு சில பகுதிகள் பயனடைகின்றன.கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை மே மாத கடைசியில் துவங்குவது வழக்கம்.இதன் பயனாக கடந்த ஆண்டு 165 அடி உயரமுள்ள சோலையார்  அணை  ஜூன் மாத இறுதியில் தனது முழு கொள்ளளவை எட்டியது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கியதுடன் கனமழை இன்றி சீரான மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக ஜூன் மாதம் நிரம்ப வேண்டிய சோலையார் அணை  ஜூலை மாத இறுதியில் 100 அடியை தொட்டுள்ளது.இந்த ஆண்டு சோலையார் அணை தனது முழு கொள்ளளவை எட்டுமா என்று கேள்விக்குறியாக உள்ளது.இந்நிலையில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை அதிகபட்சமாக வால்பாறை சின்னக்கார பகுதியில் 106 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது .வால்பாறையில் 89 மில்லி மீட்டர்.நீரார் அணையில் 75 மில்லி மீட்டர். சோலையார் அணையில் 65 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.  சோலையார் அணைக்கு  3878 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து பரம்பிக்குளத்திற்கு 200693 கன அடி தண்ணீர் சென்று கொண்டுள்ளது. பொதுப்பணித்துறையினர் மழையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

 

Tags :

Share via