தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும் 30% ஊழியர்களுடன் திங்கட்கிழமை முதல் செயல்படலாம் என அரசு அறிவித்துள்ளது.
Tags :