செங்கோட்டை-தாம்பரம் புதிய ரயில் கட்டணம்.வழித்தடம் விபரம்.

by Editor / 24-03-2023 11:01:51am
செங்கோட்டை-தாம்பரம் புதிய ரயில் கட்டணம்.வழித்தடம் விபரம்.

தாம்பரம்-செங்கோட்டை இடையே வரும் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் புதிய ரயில் இயக்கம் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் ரயில் தாம்பரத்திலிருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழன், ஆகிய மூன்று நாட்களிலும் வண்டி எண் 16103 இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 50 மணிக்கு செங்கோட்டை வந்து அடைகிறது. இந்த ரயில் விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, அம்பை, கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, வழியாக செங்கோட்டை வந்துஅடைகிறது. மறு மார்க்கமாக ஏப்ரல் 10 முதல் திங்கள் புதன் வெள்ளி ஆகிய நாட்களில் வண்டியின் 16 14 104 மாலை 4:15 மணிக்கு செங்கோட்டையிலிருந்து தென்காசி,பாவூர்சத்திரம்,கடையம்,அம்பாசமுத்திரம்,நெல்லை,கோவில்பட்டி,விருதுநகர்,மானாமதுரை,காரைக்குடி,திருவாரூர்,மயிலாடுதுறை,விழுப்புரம் வழியாக காலை 6:20 மணிக்கு தாம்பரத்தை சென்றடைகிறது. இந்த ரயிலில் சாதாரண இருக்காய் கட்டணம் 240 ரூபாயும், படுக்கை வசதி  கட்டணம் 435 ரூபாயும், மூன்றாம் வகுப்பு ஏசிக்கு 1150 ரூபாயும், இரண்டாம் வகுப்பு ஏசிக்கு 1575 ரூபாயையும் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via