ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவு

சிறுவன் ஆட்கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரரை கடத்தியதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் தொடர்புள்ளது என புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில் ஏடிஜிபியை கைது செய்து சிறையில் அடைக்க நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.
Tags :