உக்ரைன் நாட்டின் முக்கியபகுதியை கைப்பற்றி விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவிப்பு

by Editor / 02-03-2022 03:38:07pm
உக்ரைன் நாட்டின் முக்கியபகுதியை கைப்பற்றி விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவிப்பு

உக்ரைன் நாட்டின் கர்சன் நகரை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.உக்ரைன் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் கப்பல் கட்டும் தொழிற்சாலைகளும் கருங்கடலை ஒட்டி முக்கியமான துறைமுகங்களும் அமைந்துள்ள முக்கியமான நகரமாகும்,இதனை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில்  உக்ரைன் நாட்டின் ஆயுதப்படை  சார்பில் விடுத்துள்ள செய்தியில் கருங்கடலில் வட மேற்கு பகுதியின் கப்பல் போக்குவரத்தை முழுமையாக நிறுத்துவதாக உக்ரைன் நாட்டின் ஆயுதப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் ரஷ்யா தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் உக்ரைன் இந்த அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.
 

உக்ரைன் நாட்டின் முக்கியபகுதியை கைப்பற்றி விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவிப்பு
 

Tags : Russian army announces occupation of mainland Ukraine

Share via