மகளிருக்கு 8000 வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்க கூப்பன்- முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்

by Admin / 21-04-2026 02:48:30am
மகளிருக்கு 8000 வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்க கூப்பன்- முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் மற்றும் ஸ்ரீ பெரும் புதூர் ஆகிய பகுதிகளில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.  நேற்று சென்னை மாநகரின் 8 தொகுதிகளை உள்ளடக்கிய பல்வேறு இடங்களில் அவர் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவருடன் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார். எந்த வித ஈகோவும் இல்லாத பண்பான ஒரு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் என்று பாராட்டியதோடு தமிழகத்தில் தான் காலை உணவு திட்டம் முதன் முதலில் இந்தியாவிலேயே தொடங்கப்பட்டுள்ளது என்றும் பல்வேறு புதிய திட்டங்களை தம் மாநில மக்களுக்கு செய்வதில் முன்னிலை வகிக்கின்றார். முதலமைச்சர் என்றும் புகழ்ந்தார்.முதலமைச்சர் தம் பிரச்சாரத்தின் போது திமுக அரசின் சாதனைகளை முன்னிறுத்தி விவசாயிகளுக்கு இலவச மோட்டார் பம்பு செட் மகளிருக்கு 8000 வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்க கூப்பன் கொடுக்கப்பட உள்ளதையும் மகளிர் உரிமைத்தொகை 2.0 ஆட்சியில் 2000 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

மகளிருக்கு 8000 வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்க கூப்பன்- முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்
 

Tags :

Share via
Logo