அதிமுக- பாஜகவிடம் சரணடைந்து விட்டது-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் குளச்சல், நாங்குநேரி ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர், அதிமுகவில் முன்பு தமிழகத்தின் அடையாளத்தை பாதுகாத்த சிறந்த தலைவர்கள் இருந்தனர். ஆனால், தற்போதைய தலைமை ஊழல் காரணமாக பாஜகவிடம் சரணடைந்து விட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார். தமிழகத்திற்குள் நுழைய பாஜக அதிமுகவை ஒரு முகமுடியாக வாகனமாக பயன்படுத்துகிறது. என்றும் அதிமுகவை கட்டுப்படுத்துவதன் மூலம் டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள பாஜக நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார். திராவிட சித்தாந்தத்தை வெறுக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவிடமிருந்து தமிழ் மொழி பண்பாடு மற்றும் வரலாற்றை பாதுகாக்க திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார் ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த மக்களால் ஆளப்பட வேண்டும். ஆனால் ,பாஜக ஒரே கலாச்சாரம் ஒரே மொழி என்ற கொள்கையை திணிக்க முயல்வதாகவும் அவர் விமர்சனம் முன் வைத்தார். தொகுதி மறு வரையறை மூலம் தென்னிந்திய மாநிலங்களில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்க பாஜக முயற்சித்ததாகவும் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் முன் வைத்தார்.
Tags :


















