அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்!
அமர்நாத் யாத்திரைக்கு வரும் சிவ பக்தர்களுக்காக ஜம்மு தயார் நிலையில் உள்ளது. தட்கல் பதிவு வசதி இன்று ஜூன் 26 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் ஐந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டோக்கன் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கன் எடுக்கும் பக்தர்களுக்கு வியாழக்கிழமை முதல் உடனடி பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அமர்நாத் குடைவரை கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற ஜூன் 29ஆம் தேதி முதல் யாத்திரை காலம் தொடங்குகிறது.
Tags :