கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது
கோவை மாவட்டம் வடவள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செந்தில் குமார், இவருக்கு நேற்று சோமயம்பாளையம் முதல் கணுவாய், சாலையில் உள்ள தனியார் செங்கல் சூளை அருகே, சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது, தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சோதனை மேற்கொண்ட பொழுது வடவள்ளியைச் சேர்ந்த 53 வயதான பிரகாஷ் என்கின்ற காளிமுத்து, நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 38 வயதான சுப்பிரமணி ஆகிய இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் அவர்களிடமிருந்து ஒரு கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















