தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற குழு தலைவராக விஜய் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

by Admin / 05-05-2026 01:53:21pm
 தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற குழு தலைவராக விஜய் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிகழக அலுவலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுடன் கட்சி தலைவர் விஜய் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை கொண்டார். 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க உரிமை கோரி பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்அர்லேகருக்கு  கடிதம் எழுதி இருந்த நிலையில், ஆலோசனை கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற குழு தலைவராக விஜய் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்சி அமைப்பதற்கு இன்னும் பத்து இடங்கள் தேவைப்படுவதால் மற்ற கட்சிகளின் ஆதரவை பெறுவது மற்றும் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

 

Tags :

Share via
Logo