பரமத்தி வேலூர் அருகே ரூ. 54 லட்சம் பறிமுதல்
பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே கரூரிலிருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூரிலிருந்து பரமத்தி வேலூர் நோக்கி வந்த ஒரு ஜீப்பை நிறுத்தி சோதனை நடத்தினார். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 46 லட்சம் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல் அந்த வழியாக வந்த மற்றொரு ஜீப்பை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இதில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ. 8 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இந்தப் பணம் அனைத்தும் கரூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் இருந்து பரமத்தி வேலூர் மற்றும் மோகனூர் பகுதியில் உள்ள வங்கிக்கு கொண்டு செல்வதற்காக எடுத்துவரப்பட்டது தெரிய வந்தது.
இருந்தாலும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 54 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பரமத்தி வேலூர் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் தாசில்தார் செல்வகுமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
Tags :