தமிழ்நாடு இளைஞர்கள் தொழில் வாய்ப்புகளை இழக்கின்றனர்” - ஆளுநர் ஆர்.என். ரவி

by Staff / 01-03-2025 05:03:00pm
தமிழ்நாடு இளைஞர்கள் தொழில் வாய்ப்புகளை இழக்கின்றனர்” - ஆளுநர் ஆர்.என். ரவி

மாநில அரசின் இருமொழி கொள்கையால் தமிழ்நாட்டு இளைஞர்கள் தொழில் வாய்ப்புகளை இழப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன்.ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும் தொழில்முனைவுத் திறனையும் காண்பது ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது.
 

 

Tags :

Share via

More stories