இன்று தமிழக முதலமைச்சர் விஜய் புழல் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று தமிழக முதலமைச்சர் விஜய் புழல் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். புழல் சிறையில் உள்ள விசாரணை சிலை தண்டனைச் சிறை மகளிர் சிறை பிரிவுகளையும் பார்வையிட்டதோடு மகளிர் சிறை கூடத்தில் வசதி வாய்ப்புகள் எப்படி உள்ளன என்பதையும் பார்வையிட்டதோடு சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் நிலை அவர்களுக்கு வழங்கப்படும் உணவு ,தயாரிக்கப்படும் உணவு கூட செயல்பாடு மற்றும் வளாகத்தில் உள்ள மருத்துவ வசதிகள் ஆகியவற்றை கேட்டு தெரிந்ததோடு கைதிகளின் உறவினர்களிடம் கைதியை பார்ப்பதற்கு லஞ்சம் வாங்கப்படுகிறதா? என்பது போன்ற கேள்விகளையும் சிறைத்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். முதலமைச்சர் திடீர் வருகையால் சிறை கைதிகளை பார்க்க வந்த உறவினர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் வடகரையில் உள்ள பள்ளிக்கு சென்று அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சத்துணவு குறித்தும் பள்ளியின் வசதிகள் குறித்தும் கேட்டு அறிந்தார்.
Tags :


















