திமுக மாவட்ட எண்ணிக்கை 77 இல் இருந்து 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு .க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

by Admin / 28-08-2026 04:51:33pm
 திமுக மாவட்ட எண்ணிக்கை 77 இல் இருந்து 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு .க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இன்று திராவிட முன்னேற்ற கழக கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் திமுக மாவட்ட எண்ணிக்கை 77 இல் இருந்து 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர் பதவியை ஆனது இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன அதிக மக்கள் தொகை கொண்ட தொகுதி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி 110 மாவட்ட கழகங்களின் கீழ் நகர ஒன்றிய பகுதி மற்றும் கிளை அமைப்புகளை பிரிப்பதற்கான பரிந்துரைகள் 15 நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட செயலாளர் வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo