சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டு சிறை

by Staff / 11-10-2023 03:07:35pm
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டு சிறை

ஈரோடு மாவட்டம் பவானி அருகே குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கணேசன். டிரைவராக பணியாற்றி வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படித்து வந்த 17வயது சிறுமியிடம், காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, கடந்த 2021ம் ஆண்டு அச்சிறுமியை பரமத்தி வேலூருக்கு கடத்தி சென்று, கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுறகிது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், கணேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் இறுதிகட்ட விசாரணையை நடத்திய நீதிபதி மாலதி, குற்றம்சாட்டப்பட்ட கணேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

 

Tags :

Share via