கரடிக்கடித்து காயமடைந்த மூதாட்டியை சந்தித்து ஆறுதல் கூறி நிதி வழங்கிய சிவபத்மநாதன் 

by Editor / 16-10-2024 04:06:06pm
கரடிக்கடித்து காயமடைந்த மூதாட்டியை சந்தித்து ஆறுதல் கூறி நிதி வழங்கிய சிவபத்மநாதன் 

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் ஆழ்வார்குறிச்சி பேரூர் கல்யாணி புரம் ஒண்ணாவது வார்டு கீழத்தெருவை சேர்ந்த 76 வயது மூதாட்டி ராசு அம்மாள்  அவர்கள் வயலுக்கு செல்கிற பொழுது கரடி அவர்களை துரத்தி கீழே தள்ளி முதுகில்  காலால் தாக்கியது அதில்  மூதாட்டி ராசு அம்மாள் அவர்களுக்கு பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தென்காசி தெற்குமாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன தலைமையில்  கடையம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயக்குமார் பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை கீழப்பாவூர் பேரூர் கழகச் செயலாளர் ஜெகதீசன்  வீரா சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது யாகூப்  ஒன்றிய துணைச் செயலாளர் வின்சென்ட் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி  கவுன்சிலர்கள்  சக்தி சுப்பிரமணியன், ஒலி, மற்றும் கழக நிர்வாகிகள் சென்று ஆறுதல்தெரிவித்து நிதிஉதவி வழங்கினார்.

 

Tags : கரடிக்கடித்து காயமடைந்த மூதாட்டியை சந்தித்து ஆறுதல் கூறி நிதி வழங்கிய சிவபத்மநாதன் 

Share via