ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

by Staff / 09-08-2024 02:50:01pm
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர், "பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசோடு இணங்கி பணியாற்ற ஆளுநர் முன்வர வேண்டும். இல்லையெனில் அதற்கான விளைவுகளை உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க ஆளுநர் சந்தித்ததைப் போல சந்திக்க நேரிடும்" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via