100 யூனிட் இலவச மின்சாரம் அமைச்சர் விளக்கம்

by Staff / 09-03-2023 12:41:22pm
100 யூனிட் இலவச மின்சாரம் அமைச்சர் விளக்கம்

ஒரே மின் இணைப்பு எண்ணாக மாற்ற வேண்டும் என எந்த சுற்றறிக்கையையும் அனுப்பவில்லை என்று தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். எத்தனை மின் இணைப்பு பெற்றிருந்தாலும், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார். மேலும், 67 ஆயிரம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கடந்த பிப்ரவரி 28ஆம் தேதியுடன் காலக்கெடு முடிந்தது.

 

Tags :

Share via
Logo