நவாஸ் ஷெரீப் மீது தாக்குதல்

by Staff / 03-04-2022 05:06:30pm
 நவாஸ் ஷெரீப் மீது தாக்குதல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவன தலைவருமான நவாஸ் ஷெரீப் லண்டன் நகரில் வசித்து வருகிறார். 

அவரை இம்ரான் கானின் பிடிஐ கட்சியை சேர்ந்த நபர் தாக்கியதாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் நவாஸ் ஷெரீப்பின் பாதுகாவலர் காயமடைந்தார். தாக்குதல் நடத்திய நபர் மற்றும் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும். 

பிடிஐ கட்சி அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டதால் பாகிஸ்தானில் அந்த கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையை ஒருபோதும் மன்னிக்க முடியாது. 


 

 

Tags :

Share via

More stories