மேற்குவங்க முதல்வராக மே 5ல்   பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி

by Editor / 03-05-2021 06:58:58pm
மேற்குவங்க முதல்வராக மே 5ல்   பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி


மேற்குவங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றிபெற்றுள்ள நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் கல்கத்தாவில்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மம்தா பானர்ஜி. அவர் முதல்வராக பொறுப்பேற்க அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மேற்குவங்க ஆளுநரை இன்றிரவு 7 மணிக்கு சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார் மம்தா. அவர் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்திருந்தாலும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 146 உட்பிரிவு 4இன் கீழ், ஒரு சட்டமன்றத்தில் அமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர் ஆறு மாதத்திற்கு சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் இருந்தாலும் அமைச்சராக இருக்கமுடியும். அதன்பிற்கு மீண்டும் இடைத்தேர்தல் அல்லது நேரடித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் மட்டுமே அவரால் முதல்வராக தொடரமுடியும்.
அதன்படி, மே 5ஆம் தேதி மேற்குவங்க மாநில முதல்வராக 3வது முறையாக பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி. இந்தமுறை கொரோனா பாதிப்பு காரணமாக மிகவும் எளிய முறையில் பொறுப்பேற்கவுள்ளார் அவர்.
 

 

Tags :

Share via