திருமா என் அப்பா மாதிரி.. மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

by Staff / 29-02-2024 04:39:09pm
திருமா என் அப்பா மாதிரி.. மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

விசிக சார்பாக நடந்த எழுச்சித் தமிழர் இலக்கிய விருதுகள் விழாவில் 'மாமன்னன்' படத்திற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் 'எழுச்சித் தமிழர்' விருது பெற்றார். அங்கு பேசிய அவர், என் படத்திற்காக முதல் விருது சமயத்தில், விருதை வாங்கிக்கொண்டு திரும்பும் போது என் அப்பா மாதிரி திருமா அண்ணன் உட்காந்திருந்தார். என் கால்கள் அவரை நோக்கிதான் சென்றது. என் கை விருதை அவர் கையில்தான் கொடுத்தது. விருதை வாங்கிக் கட்டி அணைத்துக் கொண்டார். என் வாழ்வில் மிகச்சிறந்த தருணம் அது என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via