டெல்லி சட்டமன்ற தேர்தல் :கணிப்பு ஒன்றை ஏபிபி நியூஸ் வெளியிட்டு இருக்கிறது.

by Editor / 31-01-2025 10:10:50pm
டெல்லி சட்டமன்ற தேர்தல் :கணிப்பு ஒன்றை ஏபிபி நியூஸ் வெளியிட்டு இருக்கிறது.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் இப்போதைய நிலைமை பற்றிய கணிப்பு ஒன்றை ஏபிபி நியூஸ் வெளியிட்டு இருக்கிறது.இதன்படி பா.ஜ.க 47 தொகுதிகளையும், ஆம்ஆத்மி 17 தொகுதிகளையும், காங்கிரஸ் 6 தொகுதிகளையும் பெறுவதாக தெரிகிறது. பா.ஜ.க-வுக்கு 48% வாக்குகளும், ஆம்ஆத்மிக்கு 41% வாக்குகளும், காங்கிரஸ் 11% வாக்குகளும் கிடைக்கலாம் என்று ஏபிபி நியூஸ் கூறுகிறது.

பா.ஜ.க 45%+ வாக்குகளை பெற முடியும். ஆம்ஆத்மி 40-45% வாக்குகள் பெற முடியும். காங்கிரஸ் வாக்குகள் 10%-க்கும் அதிகமாக இருந்தால் ஆம்ஆத்மியின் கதை முடிந்துவிடும்.

ஆனாலும் காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் கட்சி 5+ தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென்றால் 15%-க்கும் அதிகமான வாக்குகளை பெற்றால் மட்டுமே முடியும். ஆனால் அதற்கு வாய்ப்புகள் இல்லை.

காங்கிரஸ் வாக்குகள் பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள் என்பதால் தேர்தல் அன்று ஆம்ஆத்மிக்கு செல்ல முடியும். அதனால் ஆம்ஆத்மி 25+ தொகுதிகளையும், பா.ஜ.க 40+ தொகுதிகளையும் பெற முடியும். அதாவது பா.ஜ.க 42 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது.

டெல்லி தேர்தல் பா.ஜ.க-வை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இன்றைய நிலவரப்படி அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா மற்றும் இப்போதைய முதல்வர் அதிஷி மூன்று பேரும் தோல்வியடையும் நிலையில் இருக்கிறார்கள்.

 

Tags : டெல்லி சட்டமன்ற தேர்தல் :கணிப்பு ஒன்றை ஏபிபி நியூஸ் வெளியிட்டு இருக்கிறது.

Share via