மது அருந்திய நபரை தட்டிக்கேட்ட இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் சரமாரியாக வெட்டி கொலை.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்ட செந்தில்குமார் என்பவரையும் அவரது குடும்பத்தை சேர்ந்த மோகன் புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகிய 4 பேருக்கு குடிபோதையில் 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக அறிவாளால் வெட்டியதில் மோகன்ராஜ்,ரத்தினாம்பாள்,புஷ்பவதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலியானார்கள்.
படுகாயங்களுடன் பல்லடம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.சம்பவம் குறித்து கோவை மேற்கு மண்டல தலைவர் பவானீஸ்வரி,திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன்,பல்லடம் டி.எஸ்.பி செளமியா மற்றும் போலீசார் விசாரணை.குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி தீவிரம். மேலும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 750 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags : இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் சரமாரியாக வெட்டி கொலை.