2030-க்குள் ஜெர்மனியை விட இந்தியா முன்னேறி மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற தயாராகி வருகிறது.

by Admin / 01-01-2026 03:57:06pm
2030-க்குள் ஜெர்மனியை விட இந்தியா முன்னேறி மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற தயாராகி வருகிறது.

இந்தியா ,ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. இந்திய உள்நாட்டு உற்பத்தி ஜி.டி.பி நாலு புள்ளி பதினெட்டு ட்ரில்லியன் டாலர்கள் என்றும் இது உள்நாட்டின் வளர்ச்சி நுகர்வு சீர்திருத்தங்களை நோக்கி நகர்த்துவதாகவும் 2030க்குள் ஜெர்மனியை விட இந்தியா முன்னேறி மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த வளர்ச்சி தொடர்ந்தால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் ஜெர்மனியை முந்தி அமெரிக்கா சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா மாறக்கூடும். உள்நாட்டு நுகர்வு வலிமையின் காரணமாகவும் கட்டமைப்புகளின் சீர்திருத்தங்கள் செய்யப்படுவதாலும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு இடையில் உறுதியாக உள்நாட்டு தேவைகளை பூர்த்தி பண்ணுவதின் அடிப்படையிலும் 2026 இல் சர்வதேச நாணய நிதியத்தின் ஐ, எம், எஸ் இறுதி தகவல்கள் வெளியாகும்போது இந்தியா நான்காவது இடத்தில் இருப்பது உறுதிப்படுத்தப்படும்.

 

Tags :

Share via