ஜி. டி .பி_மொத்த உள்நாட்டு உற்பத்தி

by Admin / 01-01-2026 04:00:55pm
ஜி. டி .பி_மொத்த உள்நாட்டு உற்பத்தி

ஜி. டி .பி_மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பதின் சுருக்கம் தான் ஜிடிபி என்று அழைக்கப்படுகிறது ஒரு நாட்டின் நிலப்பரப்பின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளின் மொத்த சந்தை மதிப்பை இது குறிக்கின்றது .இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை காட்டும் முக்கிய அளவீடாகும். ஒரு நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்படும் சந்தை மதிப்பிலான வருமானம். இது காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு என்பதை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். உற்பத்தி செய்யப்படுகின்ற உணவு உடை இன்ன பிற உற்பத்தி அழகுகள் மட்டுமின்றி மருத்துவம் கல்வி போன்ற சேவைகளை அடிப்படையாகக் கொண்டு இதனுடைய பண மதிப்பீடு கணிக்கப்படும். ஒரு நாட்டினுடைய ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தியின் அளவை கொண்டு இந்த ஜி டி பி மதிப்பீடு செய்யப்படுகிறது. அரசாங்கங்கள் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கவும் முதலீடுகளை ஈர்க்கவும் இது பயனுறும். மற்ற உலக நாடுகளின் பொருளாதாரத்தோடு நம் வலிமையை ஒப்பிட்டு பார்ப்பதற்கு இது பயன்படும். இந்தியாவின் தயாரிக்கப்படுகின்ற கார்கள் மொபைல் போன்கள் உற்பத்தியாகி நின்ற அரிசி என்ன பெற தானிய வகைகள் சேவைகளை அடிப்படையாகக் கொண்ட வங்கிகள், தகவல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பு இதிலிருந்து கணக்கிடப்படும். இதன் அடிப்படையில் தான், பொருளாதார அளவு வளர்ச்சி விகிதம்அந்த நாட்டின் நிதி நிலைமை எப்படி உள்ளது. என்பதை தெளிவுபடுத்த முடியும்.

 

Tags :

Share via