சாலை விபத்து.. பிறந்த குழந்தை பலி
சென்னை மாமல்லபுரம் ECR சாலையில் அதிவேகமாக எதிர் திசையில் வந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கோர விபத்தில் பிறந்து 45 நாட்களேயான இத்ஷ் என்ற ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து, அருகில் சென்ற சக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்படி, விபத்துக்குள்ளான 2 கார்களில் வந்தவர்களும் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :