தெலங்கானா முதல்வர் யார்

by Staff / 05-12-2023 04:52:01pm
தெலங்கானா முதல்வர் யார்

தெலங்கானா முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தெலங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது. எனினும், முதல்வர் யார் என்று அறிவிக்கவில்லை. தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லியில் உள்ள கார்கே இல்லத்தில் முதல்வர் தேர்வு குறித்து ராகுல் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் மூலம் விரைவில் தெலங்கானாவின் முதல்வர் யார் என்று, அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via