வீடு கட்டி கொடுத்தாச்சு சந்தோசமா* என்று கேட்ட கனிமொழி எம்.பி

by Admin / 12-09-2024 11:32:06pm
வீடு கட்டி கொடுத்தாச்சு சந்தோசமா* என்று கேட்ட  கனிமொழி எம்.பி

வீடு கட்டி கொடுத்தாச்சு சந்தோசமா* என்று கேட்ட கனிமொழி நன்றி அம்மா  கண்ணீர் மல்க இரு கையை எடுத்து கும்பிட்ட வயதான பெண்மணி வயதான பெண்மணியை தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்திய கனிமொழி எம்.பி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே  மானங்காத்தான்  கிராமத்தில்  50 மேற்பட்ட ஆதி திராவிடர் நல குடியிருப்புகள் இருந்து வருகின்றன இக் குடியிருப்புகளில் 20 வீடுகள்  பழுதடைந்து விட்டதால் புதிய வீடுகள் கட்டி தரும்படி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பியிடம்  அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.அவர்களது கோரிக்கையை ஏற்று கனிமொழி எம்.பியின் முயற்சியால் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் பழுதடைந்த 20 காலனி வீடுகளை இடித்து, புதிய கான்கீரிட் வீடுகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது முதற்கட்டமாக  கடந்த ஆண்டு கட்டுமானப் பணிகள் முடிவுற்ற 9 வீடுகளை ( 4 லட்சம் மதிப்பீட்டில்) கனிமொழி எம்.பி மற்றும்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு   பயனாளிகளின் பயன்பாட்டிற்காக  திறந்து வைத்து அவர்களிடம்  ஒப்படைத்தனர்  

இந்நிலையில் 2 ம்  கட்டமாக 11 வீடுகள் கட்டப்பட்டு அதற்கான பணிகள் நிறைவுற்ற நிலையில் அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.. இந்நிகழ்வில் கனிமொழி எம்பி. அமைச்சர் கீதாஜீவன்,மேயர் ஜெகன் பெரியசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொகுப்பு கான்கிரீட்  வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கினர்.அப்போது ஒரு வயதான பெண்மணியின் வீட்டை திறந்து வைத்து ஒப்படைத்த கனிமொழி எம்.பி. அந்த பெண்மணியிடம்  சந்தோசமா என்று கேட்டார்.இதைக் கேட்ட அந்த பெண்மணி தனது இரு கையை எடுத்து கும்பிட்டு நன்றி அம்மா என்று கண்ணீர் மல்க கூறினார். அவரை தட்டி கொடுத்து ஆறுதல் படுத்திய கனிமொழி எம்பி அவருடைய குடும்ப நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார். இது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிகழ்ச்சியில் கயத்தார் வட்டாட்சியர் சுந்தரகிருஷ்ணன், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாதுரை, மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்வி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

வீடு கட்டி கொடுத்தாச்சு சந்தோசமா* என்று கேட்ட  கனிமொழி எம்.பி
 

Tags :

Share via