ஆக்சிஜன் கொடுங்கள்: கைகூப்பி கேட்கும் கெஜ்ரிவால்

by Editor / 21-04-2021 06:14:42pm
ஆக்சிஜன் கொடுங்கள்: கைகூப்பி கேட்கும் கெஜ்ரிவால்

 


டில்லியில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருவதையடுத்து அங்கு கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் ரெம்டிசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.இந்நிலையில், சில மணிநேரத்திற்கு மட்டுமே போதுமான ஆக்சிஜன் மட்டுமே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவில், 'டில்லியில் கடுமையான ஆக்சிஜன் நெருக்கடி தொடர்கிறது. டில்லியில் இக்கட்டான சூழ்நிலை நிலவுவதால் மத்திய அரசு உதவ வேண்டும். சில மணிநேரத்திற்கு மட்டுமே போதுமான அளவில் ஆக்சிஜன் உள்ளது. டில்லிக்கு அவசரமாக ஆக்சிஜனை வழங்குமாறு கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.

 

Tags : cc

Share via

More stories