நடுக்கடலில் மீனவர்கள் இடையே மோதல் - மூவர் காயம்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே நடுக்கடலில் புதுச்சேரி மீனவர்கள் மற்றும் பழவேற்காடு மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி ஏற்பட்ட இந்த மோதலில், புதுச்சேரி மீனவர்கள் தாக்கி மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் பொன்னேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த மோதலை தொடர்ந்து பழவேற்காடு பகுதியில் கடைகளை அடைத்து போராட்டம் நடந்து வருகிறது.
Tags :