கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
அமெரிக்க பாஸ்டன் பல்கலைக்கழக மாணவர் சிந்தனையில் உதித்த்தது தான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்னும் கருத்து உருவாக்கமாகும். எந்தச் சூழலிலும் அழிக்க முடியாத ஒரு பூச்சியாக இருந்து வரும் கரப்பான் பூச்சியை மையப்படுத்தி அவர் இதை உருவாக்கியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் சமீபத்தில் கரப்பான் பூச்சியோடு ஒப்பிட்டு ஒரு கருத்தை சொல்லி இருந்தார். பத்திரிக்கை-ஊடக மற்றும் சமூக ஊடக செயல்பாடுகளை நோக்கி நகரும் வேலையில்லாத இளைஞர்களை அவர் கரப்பான் பூச்சி- ஒட்டுண்ணிக்கு இணையாக அவர்களுடைய செயல்பாடுகளை விமர்சித்து இருந்தார். இது ஒரு பெரும் அதிர்வலையை உருவாக்கிய நிலையில், அவரே போலி மற்றும் கள்ள பட்டங்களை பெற்றவர்களை குறிப்பிட்டதாகவும் இது இந்தியாவில் உள்ள முறையாக படித்து வந்த இளைஞர்களை சொல்லவில்லை என்றும் அவர் சொல்லிய சில நாட்களில் இந்த கருத்து இந்தியா எங்கும் மிகப்பெரும் பரபரப்பான செய்தியாக மாறியது. இணையம் முழுவதும் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி என்ற ஒரு நகைச்சுவையான அரசியல் கருத்தை வெளிப்படுத்தும் நையாண்டி கட்சியாக அதை வெளிப்படுத்தி இருந்தார். முந்தைய பாஜக அரசில் பத்திரிக்கை சுதந்திரமும் குடி உரிமைகளும் மறுக்கப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டி இந்தக் கருத்து உருவாக்கத்தை மையமாகக் கொண்டு ஒரு இணைய இயக்கத்தை, அதாவது வேலையில்லாமல் இருப்பது; சோம்பேறியாக இருப்பது; எப்போதும் இணையத்தில் இருப்பது; தொழில் ரீதியாக ஆவேசமாக பேசும் திறன் கொண்டிருப்பது ஆகியவை இதன் உறுப்பினர் தகுதிகளாக நிர்ணயித்து இந்த இயக்கத்தை ஒரு நையாண்டி இயக்கமாக பரிணமிக்க செய்தார் அந்த மாணவர். இது இந்தியாவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இருந்து உருவான ஒரு அரசியல் அமைப்பு என்று கூட சொல்லலாம்.
வேலையில்லா திண்டாட்டம், தேர்வு தாள் கசிவு, கல்வி சூழல் மற்றும் அரசியல் பொறுப்பு ஆகியவற்றின் மீது இளைஞர்களுக்கு இருக்கும் ஏமாற்றத்தை நகைச்சுவையாக மற்றும் மீம்ஸ் இதலாக வெளிப்படுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும், வன்முறையில் ஈடுபடாமல் கரப்பான் பூச்சி உடைகளை அணிந்து கொண்டு யமுனை நதியை சுத்தம் செய்வது.; குப்பைகளை அகற்றுவது போன்ற நையாண்டி போராட்டங்களையும் இந்த அமைப்புகளை கேள்வியின் மூலமாக வெளிப்படுத்தினர். தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோடிக்கணக்கான பின் தொடர்பாளர்களை பெற்று இந்தியாவின் முன்னணி அரசியல் கட்சிகளின் சமூக ஊடக பக்கங்களை விட பெரிய அளவில் பேசப்பட்டது. அதனால், இதனுடைய எக்ஸ் தளம் முடக்கப்பட்டது. இருப்பினும் மற்றொரு இளைஞர் கூட்டம் தேசிய ஒட்டுண்ணி முன்னணி என்றொரு வேடிக்கை நையாண்டி கட்சியை ஆரம்பித்துள்ளது.
Tags :


















