ராஜீவ்காந்தி படுகொலைக்கு நீதி கேட்டு கோவில்பட்டி அருகே காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் மரத்தில் தலைகீழாக தொங்கி நூதனப்போராட்டம்.
மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கிலிட வேண்டும், 7 பேர் விடுதலையில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் அய்யலுசாமி என்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகி மரத்தில் தலைகீழாக தொங்கியவாறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், உணர்வு என்ற அடிப்படையில் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு மாற்ற வேண்டும், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது அவருடன் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு 5 கோடி ரூபாய் உதவித்தொகை மற்றும் அரசு வேலை வழங்க மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகே இருக்கும் வேப்பமரத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி என்பவர் மரத்தில் தலைகீழாக தொங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். தனது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார். சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மரத்தில் தலைகீழாக தொங்கியவாறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
Tags : A Congress executive hangs himself from a tree near Kovilpatti to demand justice for the assassination of Rajiv Gandhi