60 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல் ; 3 பேர் கைது

by Staff / 13-07-2024 02:53:10pm
60 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல் ; 3 பேர் கைது

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை சிலர் பதுக்கி விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில் சோதனை செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். இந்தநிலையில், உடையாம்பாளையம் ரோடு சின்னவேடம்பட்டி பாரதி தெருவில் ஒரு வீட்டில் புகையிலைப்பொருட்களை சிலர் பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், நேற்று சரவணம்பட்டி போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக விமல், ஹான்ஸ், கணேஷ் போன்ற புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீசார் புகையிலைப்பொருட்கள் விற்ற சின்னவேடம்பட்டி சுப்பிரமணியம் நகரை சேர்ந்த மணிகண்டன்(45), கணபதி ராஜீவ் காந்தி ரோட்டை சேர்ந்த பாலாஜி(35) மற்றும் கணபதி மூகாம்பிகை நகரை சேர்ந்த ராம்குமார்(32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 62 கிலோ புகையிலைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via