அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் ‘காலை உணவுத் திட்டம்’
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் கல்வி வளர்ச்சி நாளான ஜூலை 15ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில், திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :