பெண் குளிப்பதை பார்த்தவருக்கு 15 மாதம் சிறை தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

by Editor / 22-03-2025 05:22:15pm
பெண் குளிப்பதை பார்த்தவருக்கு 15 மாதம் சிறை தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம், நாசரேந் அருகே உள்ள மூக்குப்பீறியை சேர்ந்தவர் மார்ட்டின் என்ற ஜெபஸ்டின். இவர் மீது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் குளிக்கும் போது எட்டிப் பார்த்தாக நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் பதிவு செய்து அவரை கைது செய்து சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இவ்வழக்கு விசாரணை சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த சாத்தான்குளம் கூடுதல் பொறுப்பு நீதிபதி வரதராஜன் இன்று அளித்தார். அதில், மார்ட்டின் என்ற ஜெபஸ்டின் என்பவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 15 மாதம் சிறை தண்டனையும், 20000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகை 20,000 ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

Tags :

Share via

More stories