அமெரிக்கா -ஈரான் நாடுகளுக்கு இடையிலான உயர்மட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

by Admin / 12-04-2026 08:49:17am
அமெரிக்கா -ஈரான் நாடுகளுக்கு இடையிலான உயர்மட்ட அமைதி பேச்சுவார்த்தை  தோல்வியில் முடிந்தது.

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா -ஈரான் நாடுகளுக்கு இடையிலான உயர்மட்ட அமைதி பேச்சுவார்த்தை எந்த ஒரு ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே .டி வான்ஸ் அறிவித்துள்ளார். 21 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த கலந்துரையாடலுக்கு பிறகு அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்பதற்கான உறுதியான உறுதி மொழியை ஈரான் வழங்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையாக இருந்தது .ஆனால், இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. நாங்கள் ஈரானுடன் ஆழமான விவாதங்களை நடத்தினோம் .அது நல்ல செய்தி .ஆனால், எந்த ஒரு ஒப்பந்தத்தையும் எட்ட முடியவில்லை என்பது கெட்ட செய்தி. இது அமெரிக்காவை விட ஈரானுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜே.டி.வான்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அமெரிக்க தூதுக்குழு வாஷிங்டன் திரும்பி உள்ளது. இந்தப் பேச்சு வார்த்தை சுகுமமாக நிறைவு பெறாததால் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தம் நீடிக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ,ஈரான் அமெரிக்காவின் கோரிக்கைகள் அத்துமீறியவை என்று விமர்சனத்தை வைத்துள்ளது .

 

Tags :

Share via
Logo