இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு அமைச்சகம் மற்றும் தனியாக ஒரு ஏ ஐ பல்கலைக்கழகம்

by Admin / 13-04-2026 01:38:36am
இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு அமைச்சகம் மற்றும் தனியாக ஒரு ஏ ஐ பல்கலைக்கழகம்

கன்னியாகுமரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தம் பரப்புரை கூட்டத்தில், 21 ஆம் நூற்றாண்டுக்கான நல்லாட்சி என்ற தலைப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்தார்.

இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு அமைச்சகம் மற்றும் தனியாக ஒரு ஏ ஐ பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

 தமிழகத்தை தொழில் நுட்ப மையமாக மாற்றும் நோக்கில் ஒரு பிரத்தியோக நகரம் உருவாக்கப்படும்.

ரேஷன் கார்டு ஓட்டுனர் உரிமை போன்ற அனைத்து அரசு சேவைகளையும் ஒரே இடத்தில் டிஜிட்டல் முறையில் பெறுவதற்கு வெற்றி தமிழகம் சூப்பர் ஆப் என்ற செயலியை அறிமுகப்படுத்தப்படும் .

ஒவ்வொரு குடும்பத்திற்கும்  தமிழக குடிமக்கள் சிறப்பு அட்டை வழங்கப்படும் . இதன் மூலம் இடைத்தரகர்கள் அல்லது லஞ்சம் இல்லாமல் அரசு நல திட்டங்கள் தானாகவே மக்கள் இருப்பிடத்திற்கு வந்து சேருமாறு நடைமுறைப்படுத்தப்படும்.

 தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு வந்த ஆறு மாத காலத்திற்குள் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு காலதாமதம் இன்றி அரசு சேவைகள் வணங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

அவர் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் அறிவியல் பூர்வமாக சாத்தியமாக்கி ஊழல் அற்ற ஒரு நிர்வாகத்தை உருவாக்க முடியும் என்று தன் உரையின் மூலம் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo