தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதல்.

by Editor / 27-08-2024 09:41:24am
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதல்.

நாகப்பட்டினம்  மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த தங்கதுரை, அவரது மகன் மணிகண்ட பிரபு, கங்காதரன் உள்ளிட்டோர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்,நேற்று மாலை கோடியக்கரை தென்கிழக்கே 15 நாட்டில்கள் தொலைவில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் மீது 3 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 9 பேர் ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர்.படகு என்ஜின், GPS, வாக்கி டாக்கி, வலை, செல்போன் உள்ளிட்ட 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை திருடி சென்றனர்.வெட்டு காயங்களுடன் செருதூர் மீன்பிடி இறங்குதளம் மீனவர்கள் நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.

 

Tags : தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதல்.

Share via