ஜனநாயகம்படம் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் திருட்டுத்தனமாக பகிர்ந்த 6 பேரை சைபர் கிரைம் போலீசார்கைது செய்துள்ளனர்.

by Admin / 13-04-2026 01:42:07am
 ஜனநாயகம்படம் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் திருட்டுத்தனமாக பகிர்ந்த  6 பேரை சைபர் கிரைம் போலீசார்கைது செய்துள்ளனர்.

நடிகர் விஜய் நடித்து தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்த அவரது கடைசி படம் ஜனநாயகம். இப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். பணத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில் மாநில சைபர் கிரைம் புலனாய்வு மையம் வழக்கு பதிவு செய்துள்ளது. ஸ்டோரேஜ் மற்றும் லிங்க் ஸ்டேரிங் தளங்கள் வழியாக படத்தை பதிவேற்றம் செய்த ஆறு பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக பதிவேற்றப்பட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட இணையதள இணைப்புகளை முடக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றன .தணிக்கை குழுவின் சான்றிதழ் சிக்கல்களால் படத்தின் வெளியிட தாமதமான நிலையில் எடிட்டிங் செய்யப்பட்ட பதிப்பு இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது. இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் திருட்டுத்தனமாக படங்களை பகிர்வது சட்டப்படி குற்றமாகும் என சைபர் கிராம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

 

Tags :

Share via
Logo