வீடு - கட்டுமரங்களில் தீ விபத்து

by Staff / 13-03-2023 12:13:32pm
வீடு - கட்டுமரங்களில் தீ விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கொட்டில்பாடு கே. எஸ். எஸ். நகர் சுனாமி காலனியை சேர்ந்தவர் எல்கீஸ் (55). இவர் விசைப்படகில் மீன்பிடித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சலோன்சாள் (53). எல்கீஸிம், அவரது மகனும் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றுவிட்டனர். வீட்டில் சலோன்சாள் மட்டும் இறந்தார். நேற்று பிற்பகல் சலோன்சாள் அயர்ன்பாக்சில் துணி ய்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. உடனே அவர் அயர்ன் பாக்சை அப்படியே வைத்து விட்டு சுவிட்சு போர்டில் சுவிட்சை அணைக்காமல் சலோன்சாள் வெளியே சென்று விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து தடைபட்ட மின்சாரம் மீண்டும் சீரானது. இதில் அயர்ன் பாக்சின் அடியில் வைத்திருந்த துணி சூடு தாங்காமல் தீப்பிடித்து எரிய தொடங்கியது. துணியில் பிடித்த தீ மளமளவென பரவி அருகில் கிடந்த கட்டில், மொத்தை, சோபா செட் மற்றும் துணிமணிகளிலும் பிடித்தது. இதனால் வீட்டுக்குள்ளிருந்து புகை கிளம்பியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைய வீரர்கள் விரைந்து சென்று பரவும் தீயை போராடி அணைத்தனர். அதற்குள் வீட்டிலுள்ள அனைத்து மின் ஒயரிங் ஒயர்கள், வீட்டு உபயோகப் பொருட்களும் எரிந்து நாசமானது.  இதற்கிடையே குளச்சல் கடற்கரையில் மீன் பிடித்து கரை யேற்றி வைத்திருந்த பகுதியில் காய்ந்து கிடந்த புல்வெளியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் பைபர் வல்லங்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே தகவலறிந்த குளச்சல் தீயணைப்பு வீரர்கள் கடற்கரைக்கு சென்று பைபர் வள்ளங்களில் பற்றிக்கொண்ட தீயை அணைத்தனர். இதில் 5 வள்ளங்கள் எரிந்து நாசமானது. இந்த இரு தீவிபத்துக்களால் அங்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via